பதறவைக்கும் வீடியோ..!! சுறா தாக்கி உயிரிழந்த 2 பெண்கள்..!!

பதறவைக்கும் வீடியோ..!! சுறா தாக்கி உயிரிழந்த 2 பெண்கள்..!!;

Update: 2022-07-05 18:26 GMT

எகிப்து நாட்டின் உள்ள கடற்கரையில் கடந்த சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். சிலர் கடலில் குளித்துக்கொண்டிந்தனர். அப்போது கடற்கரையில் குளித்து கொண்டிருந்த 2 பெண்களை சுறா தாக்கியது.

சுறா தாக்கியதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அந்த 2 பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்த 2 பெண்களும் ஆஸ்திரியா, ரூமெனியா நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு ஹூர்ஹாடா கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



மேலும், உயிரிழந்த ஆஸ்திரிய பெண் 5 ஆண்டுகளாக எகிப்தில் வசித்து வந்தார். அவரை சுறா தாக்கும்போது கரையிலிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

செங்கடல் பகுதியில் சுறா தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News