ராணிப்பேட்டையில் பயங்கரம்.. தீப்பிடித்து எரிந்த திரையரங்கம்..!

ராணிப்பேட்டையில் பயங்கரம்.. தீப்பிடித்து எரிந்த திரையரங்கம்..!

Update: 2022-07-05 12:32 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே சுமதி திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இரண்டு திரையரங்கங்களைக் கொண்ட இதில், மினி திரையரங்கில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

ஆனால், தீ மளமளவென எரியத் துவங்கியதால் அரக்கோணத்தில் இருந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, இரண்டு தீயணைப்பு வாகனங்களைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல் கட்ட விசாரணையில், ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

திரையரங்கம் முழுவதும் எரிந்து சேதம் ஆனது. இதன் மதிப்பு சுமார் 20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து சோளிங்கர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News