ஏகே 47 ரக துப்பாக்கியுடன் பிடிபட்ட பயங்கரவாதி ஒரு பாஜக நிர்வாகி!!
ஏகே 47 ரக துப்பாக்கியுடன் பிடிபட்ட பயங்கரவாதி ஒரு பாஜக நிர்வாகி!!
ஜம்முவில் பிடிபட்ட லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதி ஒருவர் பாஜக நிர்வாகியாக இருந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியாஸி கிராமத்தில் புதிதாக வந்து தங்கியிருந்த இரு இளைஞர்களின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்து வந்ததால் பொதுமக்கள் அவர்களின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அவர்களின் வீட்டில் ஏகே 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. இதையடுத்து, வீட்டுக்கு அருகே மறைந்திருந்த கிராம மக்கள், அவர்கள் வீடு திரும்பிய போது மடக்கிப் பிடித்தனர். பின்னர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களில் ஒருவரான தாலிப் ஹுசேன் ஷா, பாஜக நிர்வாகியாக இருந்து வந்ததும் கண்டறியப்பட்டது.
கடந்த மே 9ஆம் தேதி பாஜகவின் ஜம்மு - காஷ்மீர் சிறுபான்மையினர் ஐ.டி மற்றும் சமூக வலைதளப் பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தீவிரவாதி ஒருவர் பாஜக நிர்வாகியாக இருந்து வந்தது ஜம்மு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in