எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 58 இடங்களில் சோதனை!!

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 58 இடங்களில் சோதனை!!

Update: 2022-03-15 08:14 GMT

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 58  இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

சென்னை, கோவை, சேலம் உள்பட 6 மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கோவையில் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறதுவேலுமணியின்  கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோவையில் மட்டும் 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. 

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

அதே போல் கோவை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள், சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகளில் தேவையான தொகையை விட அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டு மோசடிகள் நடந்துள்ளதாக ஏற்கனவே புகார்கள் கூறப்பட்டன

அப்போது லஞ்ச ஒழிப்பு சோதனையில் 13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்நிலையில் தற்போது மீண்டும் 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வேலுமணி உள்பட 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது

newstm.in

Similar News