மகனின் அந்த ஒற்றை செயல்.. அங்கேயே உயிரைவிட்ட தந்தை !!

மகனின் அந்த ஒற்றை செயல்.. அங்கேயே உயிரைவிட்ட தந்தை !!

Update: 2022-03-11 09:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் 4ஆவது மகன் கோட்டைச்சாமிக்கும், அவரது தந்தை ராமுவிற்கும் வீட்டில் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து வாய்த்தகராறு முற்றி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

இதில் கோட்டைசாமி தனது தந்தை ராமுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ராமு, தனது மகன் மீது திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் இருவரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தியதோடு, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

எனினும் வீட்டிற்கு வந்த ராமு மனஉடைந்த நிலையில் இருந்துள்ளார். தனது தன்னை கைநீட்டி அடித்துவிட்டானே என்ற வேதனையில் இருந்த ராமு, தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திருவாடானை போலீசார் ராமுவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவாடனை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மகன் தந்தையை அடித்ததால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணத்துக்காக மகன் கோட்டைச்சாமி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகன் அடித்ததால் மனமுடைந்த தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
  

newstm.in

Similar News