அது போன மாசம்.. இது இந்த மாசம்.. ஆதாரத்தை தோண்டி எடுத்து முதலமைச்சருக்கு எதிர்ப்பு !!

அது போன மாசம்.. இது இந்த மாசம்.. ஆதாரத்தை தோண்டி எடுத்து முதலமைச்சருக்கு எதிர்ப்பு !!

Update: 2022-04-03 08:15 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு திடீர் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரியை 150% வரை அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பயன்பாட்டில் உள்ள இடங்களுக்கு ஏற்ப 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று தாக்குதலினால் தொழில்கள் நலிவுற்றும், மக்கள் வருமானம் குறைந்தும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் குடியிருப்புக்கான  சொத்துவரியை 100 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

கடந்த ஆட்சியில் சொத்து வரி உயர்வை எதிர்த்து குரல் எழுப்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன்  கடந்த ஆட்சியை விட இரு மடங்கு அதிக வரி விதிப்பது நியாயமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். 

கடந்த 2018ஆம் ஆண்டில்  மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தப்போது, அதிமுக அரசு சொத்து வரியை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது.  ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு செய்தால் எப்படி நியாயம் என்றும் அவரது பழைய ட்விட்டை வைரல் செய்து இணையதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


 
newstm.in

Similar News