விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் 3வது போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.  

விஜய்யின் 48ஆவது பிறந்த நாளையொட்டி, நேற்றில் இருந்து சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துள்ளார். அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு கொண்டாட்டமாக தளபதி 66 படத்திற்கான அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டது. தளபதி 66 படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குடும்பக் கதை மற்றும் ஃபீல் குட் மூவியாக உருவாகி வரும் இந்த படத்திற்கு வாரிசு என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதனைத் தொடர்ந்து இன்று காலை 11.44 மணியளவில் வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் குழந்தைகள், பட்டம், பலூன், காய்கறிகள் என கலர்ஃபுல்லான லுக்கில் விஜய் காணப்படுகிறார். 

இந்நிலையில் தற்போது வாரிசு படத்திலிருந்து 3வது போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது. சூப்பர் பைக்கில் விஜய் அமர்ந்திருக்கும் இந்த போஸ்டருக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


newstm.in
 

Tags: