தாங்கள் தான் எதிர்க்கட்சி என பாஜக மாயை பிரசாரம் செய்கிறது.. ஜெயக்குமார் அட்டாக் !

தாங்கள் தான் எதிர்க்கட்சி என பாஜக மாயை பிரசாரம் செய்கிறது.. ஜெயக்குமார் அட்டாக் !

Update: 2022-06-11 17:27 GMT

ஒரே கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக இடையே அவ்வப்போது கருத்துமோதல் உண்டாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள், பாஜகவை கடுமையாக விமர்சிக்கின்றனர். அதேபோல் பாஜகவினரும் பதில் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். எனினும் இரு கட்சிகளின் தலைமை அமைதியாகவே இருக்கிறது. 

தமிழகத்தில் நாங்கள் தான் எதிர்க்கட்சி என பாஜக கூறி வருவது அதிமுகவுக்கு அதிருப்தியை கொடுக்கிறது. இந்த நிலையில் இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து பொதுக்குழுவில் இடம்பெற உள்ள  தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார், ஆர் பி உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். 

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசின் ஓராண்டு ஆட்சியின்  மக்கள் விரோத செயல்பாடுகளை தோலுரித்துக் காட்டும் விதமாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் இடம்பெறும் என தெரிவித்தார்.

பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா  முகமது நபிகள் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு, மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்க கூடாது. மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத்தனமானது மலிவானது என பதிலளித்தார். 

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தங்கள் கட்சியை வளர்க்க எதிர்க்கட்சி என மாயை  பிரசாரம் செய்து வருகிறது. அதிமுக ஒருபோதும் எதிர்க்கட்சி கடமையில் இருந்து விலகாது என கூறினார். மேலும், ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடை சட்டம் கொண்டு வருவதற்கு முழு அதிகாரம் இருந்தும் குழு அமைத்திருப்பது தேவையற்றது. தடை நடவடிக்கையிலிருந்து பின்வாங்கும் நடவடிக்கையே இது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.  

newstm.in

Similar News