நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது - தமிழிசை
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது - தமிழிசை
புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் உற்சவத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
“பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து உள்ளது என்பதைப் பார்க்கும் போது மக்கள் கட்டுப்பாட்டோடு இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. திருவிழாக்களுக்கு அனுமதி அளித்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டதன் காரணமாக மாணவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. மக்களுக்கு நல்லது இல்லை என்றாலும் ஒரு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பலாம். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் நடந்து கொண்டார் என்பது சரியல்ல. ஆளுநர் அவரின் உரிமையைப் பயன்படுத்தி உள்ளார்.” என்று கூறினார்.