நீட் மசோதா திருப்பி அனுப்பியது குறித்து ஏற்கனவே அரசுக்கு விளக்கி உள்ளதாக கவர்னர் மாளிகை தகவல்..!!
நீட் மசோதா திருப்பி அனுப்பியது குறித்து ஏற்கனவே அரசுக்கு விளக்கி உள்ளதாக கவர்னர் மாளிகை தகவல்..!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1-ம் தேதி அரசுக்கு விளக்கி உள்ளதாக கவர்னர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்றம் உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கவர்னர் மாளிகை தமிழ்நாடு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.
- பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ள மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது.
- கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பக்கோரி ஆளுநருக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
- நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய மசோதா குறித்து விரிவான விளக்கம் தருமாறு சபாயகருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நீட் தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையும் ஆளுநர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
- மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அறிவுறுத்தி உள்ளார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அரசியலமைப்புக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டுள்ளார் எனவும் ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளை ஆளுநர் படித்தாரா? என்று தெரியவில்லை என திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கே மீண்டும் திருப்பி அனுப்புவோம் என்றார்.
நீட் விலக்கு மசோதாவில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் எனவும் நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலம் அரசு தீர்வு காண வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.