கதாநாயகி ஆசையால் நடிகைக்கு நடந்த கொடூரம்!!
கதாநாயகி ஆசையால் நடிகைக்கு நடந்த கொடூரம்!!
தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகியாக வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி பெண்ணை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்த கொடூரம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
கொளத்துார் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் சின்னத்திரை நெடுந்தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகின்றார். இவருக்கு சின்னத்திரையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவரும் வளசரவாக்கத்தை சேர்ந்த 42 வயதான காசிநாதன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
சின்னத்திரையில் கதாநாயகி வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி காசிநாதன் நடிகைக்கு தொடர்ந்து ஆசை வார்த்தை கூறிவந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடிகையை தொடர்புக்கொண்ட காசிநாதன் ஒரு நல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது உடனே என்னை சந்திக்க வா என்று அழைத்துள்ளார்.
இதை நம்பிய நடிகை
அதை கண்டித்த நடிகை அவரை எச்சரித்துள்ளார். ஆனாலும் விடாத காசிநாதன் மது குடிக்கும் உனக்கு இது பெரிய விஷயமா என்று தொடர்ந்து நடிகையிடம் பாலியல் தொந்தரவுகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளார். அத்துடன் வீட்டில் கதவை அடைத்தவர் நடிகையை இரவு முழுவதும் தனி அறையில் அடைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுப்பட்டுள்ளார்.
விடியற்காலை தனது செல்போனில் நண்பர் ஒருவரை தொடர்புக்கொண்ட நடிகை தான் அடைத்துவைத்து சித்தரவதை செய்யப்படுவதை தெரிவித்துள்ளார். உடனே அங்கு சென்ற ஆண் நண்பர் பெண்ணை மீட்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தனக்கு நடந்த கொடூமைகள் தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காசிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in