குன்னூரில் சாலையில் நடந்து வந்த நபரை தூக்கி வீசிய காட்டெருமை..!

குன்னூரில் சாலையில் நடந்து வந்த நபரை தூக்கி வீசிய காட்டெருமை..!

Update: 2022-02-02 19:05 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கன்னிமாரியம்மன் கோவில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அந்த   வழியாக கடந்த சில தினங்களாக மிகப்பெரிய காட்டெருமை ஒன்று அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து உணவை தேடி கன்னிமாரியம்மன் வீதிக்குள் வந்து, அங்கிருந்து குன்னூர் கோத்தகிரி நெடுஞ்சாலைக்கு சென்று அங்கிருந்து மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளது.

நேற்று மாலை வழக்கம்போல் காட்டெருமை கன்னிமாரியம்மன் வீதியில் உள்ள சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்தபோது, அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த நிலையில், அங்குள்ள தெரு நாய்கள் குறைக்க தொடங்கியதால் காட்டெருமை ஓடத்தொடங்கியது. அப்போது அவ்வழியாக நடந்து வந்த வாலிபரை கண்டதும் அவர் சற்றும் எதிர் பார்க்காத நிலையில் காட்டெருமை சிவாவை தாக்கி தூக்கி வீசியது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து கூச்சல் இடவே காட்டெருமை அங்கிருந்து வாலிபரை மீண்டும் தாக்காமல்  ஓட்டம் பிடித்தது.

காட்டெருமை தாக்கி காயமடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.


 


 

Similar News