எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடல்.. தீயில் பாய்ந்த இளைஞர்.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடல்.. தீயில் பாய்ந்த இளைஞர்.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

Update: 2022-06-14 05:20 GMT

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள மஜ்காவன் என்ற கிராமத்தில் ஜோதி என்ற இளம்பெண் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவர் அங்கிருக்கும் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார். அவரின் உடல் முறையாக சடங்குகள் செய்யப்பட்டு, அந்தப் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.

ஜோதியின் அத்தை மகன் கரண். இவர் ஜோதி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். இதனால் ஜோதியின் இறப்பை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உறவினர்கள் ஜோதியின் உடலுக்கு தீ மூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், கரண் எரியும் சடலத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருப்பதை சிலர் பார்த்திருக்கின்றனர்.

உடனே அவர்கள் இது குறித்து கரணின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் கரண் ஜோதியின் உடல் எரிந்துகொண்டிருந்த தீயில் விழுந்து விட்டார்.

அவர் அதில் விழுவதற்கு முன்பு ஜோதியின் சடலத்தைப் பார்த்து வணங்கியதாக இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகிறார்.

கரண் தீயில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர், அவரை பலத்த தீக்காயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கரண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கரணின் உடல் அவரின் அத்தை மகள் ஜோதியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே தகனம் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 21 வயதாகும் கரணின் இந்த முடிவு ஒட்டுமொத்த கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Similar News