குடிபோதையில் தாயையும், சகோதரியையும் கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்!!

குடிபோதையில் தாயையும், சகோதரியையும் கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்!!

Update: 2022-07-09 10:00 GMT

சத்தீஸ்கர் மாநிலத்தில் தாயையும், சகோதரியையும் கத்தியால் குத்திக்கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

கோர்பா மாவட்டத்தில் குஸ்முண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதர்ஷ் நகர் காலனியில் வசிக்கும் அமன் தாஸ், வீட்டின் குளியலறையில் தனது தாய் லக்ஷ்மி (44) , சகோதரி அஞ்சல் (21) ஆகியோரை கத்தியால் குத்திக்கொன்றுள்ளார்.

குளியலறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும் அவரது மகளையும் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீஸார் தடயவியல் குழு மற்றும் மோப்ப  நாய் கொண்டு விசாரணையை தொடங்கினர்.

தீவிர விசாரணையில், ​​அமன் தாஸ், தனது தாய் மற்றும் சகோதரியை சமையலறைக் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார். அவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிய நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கத்தி ஒன்றை மீட்டதுடன், இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News