தடுப்பு சுவரில் மோதி பேருந்து தீ பிடித்து எரிந்து விபத்து!!

தடுப்பு சுவரில் மோதி பேருந்து தீ பிடித்து எரிந்து விபத்து!!

Update: 2022-07-05 04:15 GMT

ஒடிசா மாநிலம் புல்பானியிலிருந்து புவனேஸ்வர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது பாரமுண்டா பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தீ பிடித்து எரிந்தது.

இன்ஜினில் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை முழுவதும் அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் நான்கு பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


கடந்த மே மாதம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுற்றுலா பேருந்து கந்தமால் மற்றும் கஞ்சம் மாவட்டங்களின் எல்லையில் உள்ள கலிங்க காட் என்ற இடத்தில் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.

Tags:    

Similar News