ஓட்டுநர் தூங்கியதால் ஆற்றில் கவிழ்ந்த கார்! மணமகன் உட்பட 9 பேர் பலி!!

ஓட்டுநர் தூங்கியதால் ஆற்றில் கவிழ்ந்த கார்! மணமகன் உட்பட 9 பேர் பலி!!

Update: 2022-02-20 16:48 GMT

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்துக்காக சென்றுக் கொண்டிருந்த போது மணமகன் உட்பட 9 பேர் விபத்தில் சிக்கி பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.

பர்வடாவில் இருந்து மணப்பெண்ணை அழைத்து வருவதற்காக மணமகனும் அவரது உறவினர்களும் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கோட்டாவில் உள்ள சாம்பல் ஆறு வழியாக சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்தது. இதில் மணமகன் உட்பட 9 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த கோட்டா போலீஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்தனர்.

விசாரணை நடத்தப்பட்டதில், உஜ்ஜயினில் நடக்கவிருந்த திருமணத்துக்காக சென்ற போது காலை 7.30 மணியளவில் விபத்து நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், “மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

Similar News