படுவேகமாக சென்ற கார் அந்த ஒரு நொடியில் விபத்து.. 3 பேர் பலி !!

படுவேகமாக சென்ற கார் அந்த ஒரு நொடியில் விபத்து.. 3 பேர் பலி !!

Update: 2022-04-24 08:49 GMT

விஜயகோபாலபுரம் என்னுமிடத்தில் சென்டர் மீடியனில் கார் மோதி  தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
திண்டுக்கல்லை சேர்ந்த கமலக்கண்ணண், அவரது மனைவி லதா, உறவினர்  வேம்பு ஆகிய மூன்று பேரும் காரில் சென்னை நோக்கி சென்றுள்ளனர். பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் செல்லும்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை படுவேகத்தில் சென்டர் மீடியனில் மோதி பறந்துசென்று தலைகுப்புற கவிழ்ந்தது. 

கமலக்கண்ணண், அவரது மனைவி லதா, உறவினர்  வேம்பு ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தில் உயிரிழந்த கமலக்கண்ணண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தணிக்கைபிரிவு உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இதனிடையே, இந்த விபத்து  தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலையில் பரபரப்பான சாலையில் நிகழ்ந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

newstm.in
 
 

Similar News