கள்ளத்தொடர்பு மூலம் பிறந்ததால் குழந்தைக்கு நேர்ந்த கதி.. தாயிடம் விசாரணை !!

கள்ளத்தொடர்பு மூலம் பிறந்ததால் குழந்தைக்கு நேர்ந்த கதி.. தாயிடம் விசாரணை !!

Update: 2022-03-16 18:00 GMT

கள்ளத் தொடர்பு மூலம் பிறந்த ஆண் குழந்தையை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த தாயிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண் குழந்தைகள் நலக்குழு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், இவர் ஆன்லைன் மூலம் செம்பியம் காவல் நிலையத்துக்கு புகார் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்த உதயா (29) என்ற பெண் கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தனக்கு பிறந்த குழந்தையை பணத்துக்காக விற்றுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். முதல்கட்டமாக, புகாருக்கு உள்ளான அப்பெண்ணை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, உதயா தனது கணவர் மணிகண்டனுடன் வசித்து வந்துள்ளார். அவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். 

இந்த நிலையில், அண்மையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு உதயா, தனது பகுதியை சேர்ந்த பாபு என்பவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். அவர்கள் உல்லாசமாக இருந்ததால் உதயா கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உதயாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

திருமணம் ஆகாமல் உடனிருந்தவர் மூலம் குழந்தை பிறந்ததால், அக்குழந்தையை விற்க முடிவு செய்தனர். அதன்படி, ஆதி என்ற பெண் உதவியுடன் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு சேலத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு குழந்தையை விற்பனை செய்துள்ளனர். இதற்கு சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது.

பின்னர் குழந்தையை விற்பனை செய்ய உதவிய பெண்ணை பிடித்து விசாரித்து வருகின்றனர். விரைவில் குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.  

newstm.in

Similar News