தனிமை வாட்டியதால் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!
தனிமை வாட்டியதால் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!
குழந்தை இல்லாததால் தனிமையில் சென்னையில் வயதான தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த நம்பிராஜன் (76) என்பவர் பிரபல சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி 75 வயதான பாப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர்.
திருமணம் ஆனதிலிருந்தே குழந்தை இல்லாத ஒரு ஏக்கத்தில் வாழ்ந்து வசித்து வந்த இந்த தம்பதிகள் வயது முதிர்விலும் தனிமையில் இருந்துள்ளனர்.
வயது முதிர்வு காரணமாக நம்பிராஜன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவரது மனைவி பாப்பாவுக்கு நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நம்பிராஜனின் சகோதரர் சுப்பிரமணி நம்பிராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நீண்ட நேரமாக செல்போனை எடுக்காததால் நேரில் சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது நம்பிராஜன் வீட்டின் வரவேற்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சுப்பிரமணி தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய நம்பிராஜன் உடலை இறக்கினர்.
பின்னர் நம்பிராஜன் மனைவியை தேடியபோது வீட்டின் படுக்கை அறையில் மனைவி பாப்பா தூக்கிட்டபடி இருந்ததை கண்ட போலீசார் உடல்களை கைப்பற்றினர். பின்னர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
newstm.in