ஃப்ரீயா இருக்கீங்க போல.. அதிகாரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!!
ஃப்ரீயா இருக்கீங்க போல.. அதிகாரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!!
சிபிஐ அமைப்பின் இடைக்கால தலைவராக இருந்தவர் ஐதராபாத் பகுதியை சேர்ந்த நாகேஸ்வரராவ்.இவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவரது ட்விட்டர் பக்கத்திற்கு வழங்கியிருந்த ப்ளூடிக் அங்கீகாரத்தை ரத்து செய்திருந்தது.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்கனவே விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நிறுவனத்திற்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார்கள்.
இதற்கிடையே நாகேஸ்வரராவ் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தனக்கு ப்ளூடிக் அங்கீகாரம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் வழங்கப்படவில்லை என கூறியிருந்தார்.
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நாங்கள் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தான் உத்தரவு பிறப்பித்தோம். ஆனால் அதற்குள் இந்த நீதிமன்றத்தை நீங்கள் நடுவதற்கான அவசர தேவை என்ன வந்தது?’ என நீதிபதி கேள்வி எழுப்பினர்.
மேலும் கூறுகையில், “நாகேஸ்வரராவுக்கு நிறைய நேரம் இருக்கிறது. அதனால் அவர் எங்களிடம் பரிசை எதிர்பார்க்கிறார். அப்பரிசாக, நாங்கள் உங்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் மனுவையும் தள்ளுபடி செய்கிறோம்” என உத்தரவிட்டார்.