போடுற வெடிய - வெறித்தனமான பீஸ்ட் ட்ரைலர் வெளியானது..!!

போடுற வெடிய - வெறித்தனமான பீஸ்ட் ட்ரைலர் வெளியானது..!!

Update: 2022-04-02 18:24 GMT

 தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோலமாவு கோகிலா, மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏப்ரல் 2-ந்தேதி பீஸ்ட் படத்தில் டிரெய்லவர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஷாப்பிங் மால் உள்ளே புகுந்த தீவிரவாதிகள் அங்கு பலரையும் பனைய கைதியாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு மத்தியில் மாட்டிக்கொள்ளும் விஜய் தீவிரவாதிகளை எதிர்த்து மக்களை எப்படி காப்பாற்றினார் என்பதைதான் டிரெயலர் சொல்ல வருகிறது

வீரராகவன் என்ற கேரக்டரில் வரும் விஜய் பேசும் வசனங்கள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இதில் நான் அரசியல்வாதி இல்லை சோல்ஜர் என்று சொல்லும் டைலாக் இணையத்தை தெறிக்கவிடுகிறது. 


 

Tags:    

Similar News