சிவில் நீதிபதியான காய்கறி வியாபாரி மகள்..!! குவியும் பாராட்டுக்கள்..!!
சிவில் நீதிபதியான காய்கறி வியாபாரி மகள்..!! குவியும் பாராட்டுக்கள்..!!
தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்று பிழைப்பு நடத்திவரும் வியாபாரி ஒருவரின் மகள் சிவில் நீதிபதியாகி சாதித்துள்ளார். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சாதனையை செய்தவர் 29 வயதான அங்கிதா நாகர். இவர், தற்போது சிவில் நீதிபதியாகி சாதித்துள்ளார். இவரின் தந்தை இந்தூரில் காய்கறிகள் விற்பனை செய்துவருகிறார்.
இது குறித்து அங்கிதா நாகர் கூறுகையில், “மூன்று முறை தோல்வியுற்ற போதிலும், நான் கைவிடவில்லை, எனது இலக்கை அடைவதில் கவனம் செலுத்தினேன். இந்தப் போராட்டம் எனக்குக் கதவுகளைத் திறந்தது, நான் முன்னேறிச் சென்றேன்” என்றார்.
பின்னர், சிவில் நீதிபதியாக தனது பணியைத் தொடங்கிய பிறகு, தனது நீதிமன்றத்திற்கு வரும் எவருக்கும் நீதியை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதாக அங்கிதா நாகர் கூறினார்.