வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொன்ன பிரபல நடிகை!!

வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொன்ன பிரபல நடிகை!!

Update: 2022-04-02 06:15 GMT

கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இளம் நடிகை யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

தனது 14 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்துள்ளார். குறிப்பாக, அடல்ட் காமெடி படமானஇருட்டு அறையில் முரட்டு குத்துபடத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, யாஷிகா ஆனந்த் அறுவை சிகிச்சை, மருத்துவமனை என நீண்ட காலம் ஓய்வில் இருந்தார். இதற்கிடையே, சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதையும் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாஷிகா வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், எனக்கு திருமணம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வழங்கி விட்டார்கள்.

இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். நமக்கு லவ் எல்லாம் செட் ஆகாதுஎனத் தெரிவித்துள்ளார். மாப்பிள்ளை யார், எப்போது திருமணம் என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

newstm.in

Similar News