உத்தரபிரதேசத்தின் ஃபதேபூரில் மூன்று சக்கர வாகனத்திற்குள் 27 பயணிகள் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த ஆட்டோ உரிமையாளருக்கு அபராதம் விதித்து போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில், அங்குள்ள அவுரையா மாவட்டத்தில் ஏழு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. போலீசார் பிரதான சாலையில் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது ஒரே பைக்கில் 7 சிறார்களுடன் ஒருவர் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பைக்கை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அதாவது, பக்ரித் முடிந்து குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிகொடுப்பதற்காக சென்றுகொண்டிருப்பதாகவும், வேறு போக்குவரத்து வசதி இல்லை என்றும் அந்த நபர் போலீசார் கெஞ்சினார்.

அதேநேரத்தில் அந்த நபர் ஹெல்மெட் கூட அணியவில்லை. எனினும் ஒருவேளை தவறிவிழுந்தால் குழந்தைகளுக்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படும் என கூறினர். மேலும் கடுமையான  எச்சரிக்கை விடுத்து அந்நபரை அனுப்பிவைத்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

  


newstm.in
 

Tags: