233 ஆண்டுகால வரலாற்றில் முதல் கறுப்பின பெண் நீதிபதி!!

233 ஆண்டுகால வரலாற்றில் முதல் கறுப்பின பெண் நீதிபதி!!

Update: 2022-04-11 10:37 GMT

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரைத் தொடர்ந்து அமெரிக்காவில் கறுப்பின பெண் நீதிபதி ஒருவர் பேசு பொருளாகி உள்ளார்.

கேதன்ஜி பிரவுண் ஜாக்சனை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்ததை அடுத்து அமெரிக்க செனட் சபையில் கடந்த வியாழன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் பிரவுண் ஜாக்சனுக்கு ஆதரவாக 53 வாக்குகளும் எதிராக 47 வாக்குகளும் விழுந்தன. இதன் மூலம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 233 ஆண்டுகால வரலாற்றில் நீதிபதியாக தேர்வான முதல் கறுப்பின பெண்மணி என்ற பெயர் கேதன்ஜி பிரவுண் ஜாக்சனுக்கு கிடைத்துள்ளது.

ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வில் பிரவுண் ஜாக்சனும் இடம்பெற உள்ளார். இதன் வாயிலாக, ஒரு கறுப்பினப் பெண்ணை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை அதிபர் ஜோ பைடன் நிறைவேற்றி உள்ளார்.

51 வயது நிரம்பிய பிரவுண் ஜாக்சன் நீதிபதியாக தேர்வானதை அடுத்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், தனது முன்மாதிரிகள், தலைமுறைகளின் தோள்களில் தான் நிற்பதை உணர்வதாக உணர்ச்சிப் பொங்க குறிப்பிட்டார்.

தாம் இப்போது தனிநபர் அல்ல என்பதை நன்கறிவேன் என்றும் கேதன்ஜி பிரவுண் ஜாக்சன் குறிப்பிட்டார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Similar News