ஹோலி பண்டிகைக்கு சிறுமியை நரபலி கொடுக்க திட்டமிட்ட கும்பல்!!

ஹோலி பண்டிகைக்கு சிறுமியை நரபலி கொடுக்க திட்டமிட்ட கும்பல்!!

Update: 2022-03-17 07:17 GMT

ஹோலி பண்டிகை அன்று நரபலி கொடுப்பதற்காகச் சிறுமியைக் கடத்திய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், சிஜார்சி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடந்த மார்ச் 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிராம மக்களிடம் சிறுமி குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சோனு பால்மிகி மற்றும் அவரது நண்பர் நீத்து ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து இருவரிடமும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சோனு பால்மிகிக்கு நீண்ட நாட்களாகத் திருமணமாகவில்லை. இதனால் நண்பர் நீத்துவுடன் சேர்ந்துகொண்டு சதேந்திரா என்ற மந்திரவாதியைச் சந்தித்தார்.

அப்போது அவர், ஒரு மனித உயிரை நரபலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் சிறுமியைக் கடத்தி ஹோலி பண்டிகையன்று நரபலி கொடுப்பதற்காக வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  சோனு பால்மிகி, நீத்து ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். விரைந்து நடவடிக்கை எடுத்து சிறுமியை மீட்ட போலீஸாருக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு தெரிவித்து ரூ.5,000 வெகுமதி வழங்கினார்.

newstm.in

Similar News