மயக்கு மருந்து கொடுத்து காதலனை குத்திக்கொலை செய்த காதலி!!

மயக்கு மருந்து கொடுத்து காதலனை குத்திக்கொலை செய்த காதலி!!

Update: 2022-07-14 18:40 GMT

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி  இஎஸ்ஐ, மருந்தக ஊழியரை பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ்குமார்(35) என்பவர் ஆரல்வாய் மொழியில் உள்ள இஎஸ்ஐ மருத்தகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு மணவாளக்குறிச்சியை சேர்ந்த மேக்ஸன் என்பவரின் மனைவி ஷீபாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.

அப்போது மருந்து வாங்க இஎஸ்ஐ மருத்துவமனை சென்ற போது ஷீபாவுக்கு ரதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் நெருக்கமாக பழக துவங்கிய நிலையில், ஷீபாவிடம் கணவரை விவாகரத்து செய்யுமாறு ரதீஷ்குமார் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு ஷீபா தனது கணவர் மேக்சனை  விவாகரத்து செய்தார். அதன் பின்பு நாகர்கோவிலில் உள்ள விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். ஆனால்  ரதீஷ் குமார் ஷீபாவை திருமணம் செய்யாமல் 2021இல் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷீபா ரதீஷ்குமாரிடம் கேட்ட போது தானும் விவாகரத்து செய்துபிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி வந்துள்ளார். இந்நிலையில் ரதீஷ்குமாரின் மனைவி கர்ப்பமாகியதை தெரிந்து கொண்ட ஷீபா தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஷீபா மருந்தகத்திற்கு வந்து மயக்க மாத்திரை கலந்த உணவை ரதீஷ்குமாருக்கு  தன் கையால் பரிமாறியுள்ளார். இதில்  ரதீஷ்குமார் மயக்கமடைந்த போது, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, அவரது சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார்.

பின்னர் அவசர எண் 100 க்கு தொடர்பு கொண்டு கொலை குறித்து தகவல் தெரிவித்துள்ளார்அதன் பின் ஆரல்வாய்மொழி போலீசாரிடம் சரணடைந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News