கொரோனா பரவலை தடுக்க வீட்டின் ஜன்னல்களை மூட சொன்ன அரசு!!
கொரோனா பரவலை தடுக்க வீட்டின் ஜன்னல்களை மூட சொன்ன அரசு!!
உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. ஏற்கனவே இரண்டு வருடங்களை முழுமையாக ஆட்கொண்ட கொரோனா இப்போது மீண்டும் மக்கள் மத்தியில் அச்சம் காட்டி வருகிறது. இந்நிலையில் சீன அரசு கொரோனா பரவலை தடுக்க தங்கள் வீட்டு ஜன்னல்களை மூட வேண்டும் என மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவும் வடகொரியாவும் அண்டை நாடுகளாக உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே யாலு என்ற நதி எல்லையாக இருந்து வருகிறது. இரு நாடுகளிலும் தற்போது கோவிட் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டு வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
குறிப்பாக, சீன அரசு ஜீரோ கோவிட் யுக்தி என்ற பெயரில், அந்நாட்டில் குறைந்த அளவில் பாதிப்பு ஏற்பாட்டாலும் பெரிய அளவிலான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பக்கத்து நாடான வட கொரியாவில் இருந்து தொற்று காற்று மூலமாகக் கூட பரவும் அபாயம் உள்ளது என்று சீனா அச்சத்தில் உள்ளது.
எனவே, டேன்டோங் என்ற எல்லை நகரத்தில் உள்ள மக்களை அவர்கள் வீட்டு ஜன்னல்களை திறக்காமல் மூடியே வைத்திருக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. மேலும், யூலு நதிக்கு அருகே வசிப்பவர்கள் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காற்றில் நோய் பரவும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த முடிவை சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நகரத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், தற்போது 850க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in