ஆளுநர் செயலில் உள்நோக்கம் உள்ளது - அமைச்சர் குற்றச்சாட்டு..!!

ஆளுநர் செயலில் உள்நோக்கம் உள்ளது - அமைச்சர் குற்றச்சாட்டு..!!

Update: 2022-02-05 05:45 GMT

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

ஆளுநர்  நீட் தேர்வு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளை நடைபெற உள்ள உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரை சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சதவீதத்தை 10%ஆக உயர்த்துவது முழுமையான பயனைத் தராது. நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு என்பதே மாணவர்களுக்கு முழு பயனை தரும் என்றார்.

Similar News