மணமகனின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தாலி கட்டிய கையோடு மனைவியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்ற மாப்பிள்ளை..!!
மணமகனின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தாலி கட்டிய கையோடு மனைவியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்ற மாப்பிள்ளை..!!
குடவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் மணிகண்டனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. நேற்று முன் தினம் மணிகண்டனின் தந்தை செல்வமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதே நேரத்தில் மிகுந்த மனக்கவலையுடன் தந்தை இல்லாமல் திருமணம் நடைபெறுகிறது என எண்ணி மணிகண்டன் வேதனைப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று நாச்சியார்கோவிலில் மணிகண்டன் - சுஜாலினி திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இதனையடுத்து தாலி கட்டி முடித்ததும் உடனடியாக தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு மணிகண்டன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தனது தந்தை செல்வமணியிடம் வாழ்த்து பெற்றார்.
பெற்றோர்களை மதியாமல் திரியும் சில பிள்ளைகளுக்கு மத்தியில் மணிகண்டன் தேடி வந்து வாழ்த்து பெற்றதற்கும் அங்கிருந்த மக்கள் வரவேற்றும் பாராட்டியிருக்கிறார்கள். ,