பள்ளியில் ஆசிரியையுடன் தலைமையாசிரியர் உல்லாசம்.. வீடியோ பரவியதால் அதிர்ச்சி !!
பள்ளியில் ஆசிரியையுடன் தலைமையாசிரியர் உல்லாசம்.. வீடியோ பரவியதால் அதிர்ச்சி !!
பள்ளிக்குள்ளேயே ஆசிரியையுடன் தலைமையாசிரியர் ஒருவர் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டிஸ்கரில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. தற்போது மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியை ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் உள்ள பள்ளி ஸ்டோர் ரூமில் வைத்து இருவரும் பாலியல் உறவுகொண்டிருந்த சம்பவத்தை மாணவர்கள், கிராமத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் இதனை வீடியோ பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோ அடிப்படையில் அக்கிராமத்தை சேர்ந்த சிலர், அதை அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, அப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட அந்த தலைமையாசிரியர் - ஆசிரியை பள்ளி வளாகத்துக்குள் பாலியல் உறவுக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி, பலராலும் பகிரப்பட்டு கண்டனங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.
கிராம மக்கள் தரப்பில், தாங்கள் ஏற்கெனவே அந்த தலைமை ஆசிரியரை எச்சரித்ததாகவும், தொடர்ந்து இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கொரோனாவின் போது பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரத்திலும் பள்ளி முதல்வரும் அந்த ஆசிரியையும் பள்ளி வளாகத்தில் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், வீடியோவுக்குப் பின்னர், அதைவைத்து பள்ளி முதல்வரிடம் ஒரு கும்பல் பணம் பறிக்க முயன்றது தொடர்பான ஆடியோ க்ளிப் சில தினங்களுக்கு முன் பரவியது குறிப்பிடத்தக்கது. அந்த ஆடியோவில் தயவுசெய்து வீடியோவை வெளியிடவேண்டாமென அந்த பள்ளிமுதல்வர் கேட்பதாக தெரிகிறது.
newstm.in