பெண்ணை காக்க ரயில் முன் பாய்ந்த ஹீரோ!!

பெண்ணை காக்க ரயில் முன் பாய்ந்த ஹீரோ!!

Update: 2022-02-13 09:48 GMT

மத்திய பிரதேச மாநிலம், போபால் அருகே பர்கேடியில் ரயில்வே தண்டவாள ஓரத்தில் இளம்பெண் ஒருவர் முதுகில் பையை சுமந்தவாறு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது.

ரயிலைப் பார்த்த பீதி அடைந்த அப்பெண் அலறியவாறு தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அவரால் எழுந்து ஓட முடியவில்லை. அப்போது கொஞ்சமும் யோசிக்காமல் முகமது மெகபூப் (37) என்பவர் மின்னல் வேகத்தில் ரயில் முன் குதித்தார்.


அந்தப் பெண்ணை தண்டவாளங்களுக்கு நடுவே இழுத்து படுக்கப்போட்டு, அவரது தலைக்கு நேராக தானும் தலை வைத்துப்படுத்துக்கொண்டு அந்தப் பெண்ணை தலையைத் தூக்க விடாமல் பார்த்துக்கொண்டார்.

ரயில் முழுமையாக கடந்து சென்ற பின்னர் இருவரும் எழுந்து தண்டவாளத்தை கடந்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது உயிரை பற்றி கவலைப்படாமல் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

newstm.in

Similar News