போதை தலைக்கேறி மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்!!

போதை தலைக்கேறி மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்!!

Update: 2022-02-05 17:00 GMT

தேனி மாவட்டம் வருசநாடு அருகே தனிபாறை கிராமத்தை சேர்ந்த கணேசன் (58) -அம்சகொடி(50) தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணேசன் தனது மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கையில் கிடைத்ததைக் கொண்டு அடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் போதையின் உச்சத்திற்கு சென்ற கணேசன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அம்சக்கொடியை சராமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதிர்ச்சியடைந்த கணேசன் வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள கிராமத்திற்கு சென்று மதுபானம் வாங்கி குடித்துக் கொண்டும், விடுதியில் உணவை வாங்கி சாப்பிட்டுக் கொண்டும் கடந்த 5 நாட்களாக காலத்தை கடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அம்சக் கொடியின் உடல் அழுகி துர்நாற்றம் வீசியதை அடுத்து, அருகில் இருந்தவர்கள் கடமலைக்குண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து போலீஸார் குடிபோதையில் சுற்றிக் கொண்டிருந்த கணேசனை கைது செய்தனர்.
விசாரணையில் தானே தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in

Similar News