மனைவியை பார்க்க சென்ற கணவர் மாமியார் வீட்டில் வெட்டிக்கொலை
மனைவியை பார்க்க சென்ற கணவர் மாமியார் வீட்டில் வெட்டிக்கொலை
மனைவியை பார்க்க நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்ற கணவர் மாமியார் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பிச்சிப்பாளையம் காலனி தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா (42). இவரது மனைவி அனிதா (35). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவுக்கும் அனிதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனுஹாசினி (10) என்ற மகளும், நிரஞ்சன் (7) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அனிதா, கும்பகோணம் அடுத்த நெய்வாசல் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இளையராஜா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மனைவி அனிதாவை பார்ப்பதற்காக நெய்வாசல் வந்துள்ளார். மேலும் இரவு மனைவி அனிதா வீட்டிலேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில் காலை இளையராஜா இல்லாததை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது அனிதாவின் வீட்டு கொல்லைப்புறத்தில்இளையராஜா உடலில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நேரில் சென்ற காவல்துறையினர் இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து இளையராஜா மனைவி அனிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை கள்ளக்காதல் விவகாரத்தில் நடைபெற்றதா அல்லது வேறு எதுவும் காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in