விக்ரம் படத்தில் கமல் செய்ய இருக்கும் சம்பவம்.. செம கடுப்பில் பாஜகவினர் !!

விக்ரம் படத்தில் கமல் செய்ய இருக்கும் சம்பவம்.. செம கடுப்பில் பாஜகவினர் !!

Update: 2022-05-18 09:14 GMT

பாஜகவை வேற லெவலுக்கு பிரித்து மேயும் வகையில் ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் காட்சிகளை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி, பஃகத் பாஷில் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம். இப்படம் தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் வருகின்ற ஜூன் 3 அன்று வெளியாக உள்ளது. 

இந்த நிலையில் விக்ரம் படத்தின் 'பத்தல... பத்தல' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது. கமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு குத்து டான்ஸ் போட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் பத்தல பத்தல பாடலில் இடம் பெற்றுள்ள 'ஒன்றியத்தின் தப்பாலே.. ஒன்னியும் இல்ல இப்பாலே' என்ற வரிகள் பாஜகவினரை கடுப்பேற்றி இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் கமல் அவர் நடிக்கும் படத்தின் பாடல் மூலம், ஒன்றிய அரசை குறித்து பேசி இருப்பது தற்போது சர்ச்சையாகி வருகிறது. 

இதற்கு மத்தியில், 'பத்தல பத்தல' பாடலில் வரும் சில குறிப்பிட்ட வரிகளை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் கமலஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, ஃபகத் பாசில் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவின்போது, விக்ரம் படத்துல நானும் ஒரு சின்னதாக ரோல் பண்ணியிருக்கேன், என்று இயக்குநர் சந்தான பாரதி கூறி இருப்பது தான் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது. அதாவது இயக்குநர் சந்தான பாரதியை பொறுத்தவரையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை போன்ற உருவ தோற்றம் கொண்டவர்.  

ஏற்கனவே விக்ரம் படத்தின் பாடலில் ஒன்றிய அரசை சாடியிருக்கும் சூழலில் அதே படத்தில் அமித்ஷா உருவ ஒற்றுமையில் இருக்கும் சந்தான பாரதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது. எனவே விக்ரம் படத்தில் மத்திய அரசையும், பாஜகவை வழிநடத்துபவராக பரவலாக பேசப்படும் அமித்ஷாவையும் கமல் வச்சி செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் விக்ரம் படத்துக்கு எந்த வகையில் முட்டுக்கட்டை போடலாம்? அல்லது கமல்ஹாசனை எப்படி மடக்கினால் படத்தை தடுக்க முடியும்? என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பட வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளதால் தடையில்லாமல் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

newstm.in
 

Similar News