குடியரசுத் துணைத்தலைவர் பங்கேற்க இருக்கும் இடத்தை ஆய்வு செய்ய வந்த புலனாய்வு அதிகாரி பலி..!!

குடியரசுத் துணைத்தலைவர் பங்கேற்க இருக்கும் இடத்தை ஆய்வு செய்ய வந்த புலனாய்வு அதிகாரி பலி..!!

Update: 2022-05-20 05:50 GMT

புலனாய்வுத் துறையின் உதவி இயக்குநராக ஐதராபாத்தில் பணி புரிந்து வருகிறார் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குமார் அம்ரேஷ் (51). இன்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகையை முன்னிட்டு, ஐதராபாத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஷில்பா கலாவேதிகாவில் உள்ள மேடையை புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்த போது, மேடையின் நுனியில் இருந்த வெற்றிடத்தைக் கவனிக்காமல் கால் வைக்க, அங்கிருந்து கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புலனாய்வு அதிகாரி கால் இடறி விழுந்த விபத்துக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.


அந்த வீடியோவில், ஆடிட்டோரியத்தை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்த குமார் அம்ரேஷ், மேடையின் நுனிப் பகுதிக்கு வந்துவிட்டதை உணராமல் இடைவெளியில் அவர் கால் வைக்க, நிலைதடுமாறி, கால் இடரி கீழே இருந்த 12 அடி பள்ளத்தில் விழுந்தார். அங்கு விளக்குகள் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்கவும், தொழில்நுட்ப பணியாளர்கள் இருக்கவும் படிகட்டுடன் கூடிய ஒரு சிறிய அறை இருந்தது. அதற்குள் அவர் விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

Similar News