கார் தொழிற்சாலைக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தை!!
கார் தொழிற்சாலைக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தை!!
பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் நுழைந்த 3 வயது ஆண் சிறுத்தையை ஆறு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பத்திரமாக வெளியேற்றனர்.
சொகுசு கார்களை தயாரிப்பதில் உலகளவில் முன்னணியில் இருக்கும் பென்ஸ் நிறுவனத்தின் புனேவில் உள்ள ஆலையில் 750 பேர் பணிபுரிகின்றனர். இரவுப்பணி ஊழியர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டும், காலைப் பணி ஊழியர்கள் வந்து கொண்டும் இருந்தனர்.
அப்போது இயந்திர சத்ததுக்கு நடுவே உறுமல் சப்தம் கேட்பதை ஊழியர்கள் கவனித்தனர். அப்போது ஒரு ஊழியர் சிறுத்தை ஒன்று அங்குமிங்கும் செல்வதை பார்த்துள்ளார். அதிர்ந்து போன அவர் மேலாளரிடம் தகவலை தெரிவிக்க அவரும் சிறுத்தை சுற்றுவதை சிசிடிவி மூலம் உறுதி செய்தார்.
Surprise visitor at @MercedesBenzInd car plant today
— Sirish Chandran (@SirishChandran) March 21, 2022
Forest dept officials are trying to rescue the Leopard. All employees told to go home, no production or dispatches today pic.twitter.com/PelLyiXSKA
உடனடியாக தொழிற்சாலைக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அனைத்து ஊழியர்களையும் உடனடியாக பல பேருந்துகளில் ஏற்றி அந்த பகுதியை விட்டு தொழிற்சாலை நிர்வாகம் வெளியேற்றியது.
வனத்துறைக்கு தகவல் அளித்ததும் அவர்கள் வந்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். சிசிடிவி உதவியுடன் 6 மணி நேரம் போக்கு காட்டிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர்.
சிறுத்தைக்கு 3 வயது தான் இருக்கும் என்றும் வழிதவறியே தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
newstm.in