73 வயதில் மலர்ந்த காதல்.. கணவரை விவாகரத்து செய்து இளைஞருடன் லூட்டி அடிக்கும் பாட்டி !
73 வயதில் மலர்ந்த காதல்.. கணவரை விவாகரத்து செய்து இளைஞருடன் லூட்டி அடிக்கும் பாட்டி !
உலகில் சில நிகழ்வுகளும் சிலரது செயல்களும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் தற்போது மூதாட்டி ஒருவரின் செயல் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
அதாவது, அமெரிக்காவைச் சேர்ந்தவர் கரோல் எச். மேக் என்ற 73 வயது பாட்டி ஒருவருக்கு திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர், தற்போது வேறொரு இளைஞருடன் காதலில் விழுந்துள்ளார். இதனால், பாட்டி தன் கணவரை விவகரத்து செய்துவிட்டு தற்போது வேறு ஒருவரை காதலித்து வருகிறார்.
இது குறித்து கரோல் எச். மேக் என்ற பாட்டி தனது டுவிட்டரில் தன் விரலில் மோதிரத்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அது குறித்த கதையை கூறி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. 40 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு 70 வயதில் தனிமரமாகி எதிர்பாராத விதமாக உண்மையான காதலை 73 வயதில் இந்த கொரோன தனிமைக்கு நடுவே பெற்று தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன் என கூறி உள்ளார்.
இவரது கணவர் 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு, தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்துவாழ்ந்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒருவரை சந்தித்து அவருடன் காதலில் விழுந்து அவரையே தற்போது மோதிரம் மாற்றி திருமணமும் செய்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Life is so strange. After nearly four decades of marriage, I never expected to be single again at 70. And I certainly didn’t expect to find true love at the age of 73 in the middle of a pandemic! And now this! pic.twitter.com/HszN0zj9pr
— Carol H. Mack (@AttyCarolRN) February 11, 2022
newstm.in