தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்..!

தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்..!

Update: 2022-07-14 12:51 GMT

உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவத்திரு ஊரன் அடிகள் காலமானார். அவருக்கு வயது 90.

திருச்சியில் பிறந்த தவத்திரு ஊரன் அடிகள் தமிழ் சமயங்கள், சன்மார்க்க நெறிகளை ஆராய்ச்சி செய்துள்ளார். அத்துடன், பல ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார்.

கடலூரில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தவத்திரு ஊரன் அடிகள் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று வடலூரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News