10 ஆயிரம் பேரை மீட்ட மாமனிதர்… இதுதான் சேவை!!

10 ஆயிரம் பேரை மீட்ட மாமனிதர்… இதுதான் சேவை!!

Update: 2022-03-01 09:35 GMT

குஜராத்தில் மருந்தாளுநர் ஒருவர் புகையிலை, குட்கா, பான், பீடி, சிகரெட் பிடித்தல் போன்ற பழக்கத்திலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை மீட்டுள்ளார்.

படான் பகுதியைச் சேர்ந்த நரேஷ் படேல் (51), அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். குஜராத்தில் ஆண்கள், பெண்கள் இருவரும் அதிக அளவில் புகையிலை, பான், குட்கா போன்ற பழக்கத்துக்கு ஆளானவர்கள்.

இதையறிந்த நரேஷ், அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான போராட்டத்தை கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கினார். குஜராத்தில் மிகக் குறைந்த விலையில் புகையிலைப் பொருட்கள் கிடைக்கின்றன.

41% ஆண்களும், 8.7% பெண்களும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.எனவேதான், இந்த பான், புகையிலைப் பழக்கத்திலிருந்து அவர்களை மீட்கும் பணியைச் செய்து வருவாக கூறுகிறார்.

கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்த போதை பழக்கத்திலிருந்து மீட்டுள்ளதாகவும், ஆனால் இது போதாது, மாநிலத்தில் மிகப்பெரிய அளவிலான புகையிலை போதை மறுவாழ்வு மையம் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நரேஷ் புகையிலைப் பழக்கத்தை விட்டொழிப்பது தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை தயாரித்து பல்வேறு கிராமங்களில் விநியோகம் செய்தும், சுவர்களில் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

தற்போது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

newstm.in

Similar News