ஃபேஸ்புக்கில் நிறுத்தப்படும் மிக முக்கிய வசதி!!

ஃபேஸ்புக்கில் நிறுத்தப்படும் மிக முக்கிய வசதி!!

Update: 2022-02-02 10:11 GMT

ஃபேஸ்புக்கில் சுயவிவர வீடியோ அம்சம் பிப்ரவரி 7ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக் பயனர்களுக்காக தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த அம்சங்களில் சில வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. மறுபுறம், சில அம்சங்களை நிறுவனம் நீக்கியும் வருகிறது.

இன்ஸ்டாகிராம் உடன் பேஸ்புக் இணைந்து செயல்படுவதால், அதில் இருப்பது போல உள்ள பேஸ்புக் அம்சங்கள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை பேஸ்புக் சுயவிவர வீடியோவை நீக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, பிப்ரவரி 7ஆம் தேதியுடன் புரொபைல் வீடியோ அம்சம் நீக்கப்படுகிறது. உங்களின் புரொபைல் வீடியோவின் முகப்புப் படம் உங்களின் புரொபைல் பிக்சராக மாற்றப்படும். அல்லது நீங்கள் விரும்பும் புகைபடத்தை மாற்ற உடனடியாக அப்டேட் செய்யவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த அம்சத்தின் மீது பயனர்கள் அதிக ஆர்வம் காட்டாததால், இந்த அம்சம் நீக்கப்படுவதாக சில பயனர்கள் கருதுகின்றனர்.

பேஸ்புக் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் முதல் சுயவிவர வீடியோ அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக இருந்து வந்தாலும், மிகச் சில பயனர்களே சுயவிவர வீடியோக்களைப் பயன்படுத்தி வந்தனர்.

உங்கள் சுயவிவர பகுதியில், சுயவிவர வீடியோவை நீங்கள் பதிவேற்றி இருந்தால், அதை பதிவிறக்கம் செய்து உங்கள் போனிலோ அல்லது கணினியிலோ சேமித்து விட்டு, பேஸ்புக் பக்கத்தில் இருந்து அதை நீக்குவதற்கான வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது.

newstm.in

Similar News