அடுத்த 11 நாட்களும் போர்களம் தான்.. தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல் !!
அடுத்த 11 நாட்களும் போர்களம் தான்.. தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல் !!
நகர்ப்புள உள்ளாட்சித் தேர்தலில் போர்களத்தில் இருப்பது போல் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வானகரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது, பா.ஜ.க குறுகிய காலத்தில் அதிக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாகும். அடுத்த பதினொரு நாட்கள் போர்க்களம் போல் இருக்கும். போர்க்களத்தில் இருப்பதுபோல் முழுமூச்சாக பணியாற்ற வேண்டும்.
கொரோனா காலத்தில் நாம் அதிகமாக மக்களுக்கு செய்துள்ளோம். நம்மைப்போல் எந்த கட்சியும் வேலை செய்யவில்லை. பா.ஜ.க-வில் மிகத் திறமையானவர்களை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பா.ஜ.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் மதங்களைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் வெற்றி பெற்றால் மற்ற கட்சிகளில் கமிஷன் வாங்குவதற்காக மட்டும் தான் இருப்பார்கள். பா.ஜ.க மக்களை நேசிக்கும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. பா.ஜ.க சார்பில் போட்டியிட கடுமையான போட்டி இருந்தது. அடுத்த 11 நாட்கள் சென்னை தாம்பரம் ஆவடி மாநகராட்சியில் நிறையபேர் வெற்றி பெறுவார்கள். மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். புதியவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள்.
களத்துக்கு செல்லும்போது நமக்கு வரவேற்பும் தயாராக உள்ளது. செல்போன் பவர்ஃபுல்லான கருவி. அதனை முழுமையாக பயன்படுத்துங்கள். போன் மூலம் வாக்காளரிடம் பேசுங்கள். நீங்கள் செய்துள்ள பணிகளை சமூகவலைத்தளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேருங்கள். பா.ஜ.க-வின் செயல்பாடுகளையும், மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்.
தி.மு.கவில் வாரிசுகளுக்கு மட்டும் தான் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தி.மு.க-வின் குடும்ப ஆட்சி கிராமம் முதல் கோபாலபுரம் வரை தொடர்கிறது. நமது கட்சியின் முக்கியமான மூன்று நோக்கங்கள் கட்சியை வளர்க்க வேண்டும், மக்கள் அளிக்கும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும், நீங்கள் வெற்றி பெற வேண்டும். எப்போதும் இல்லாத அளவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் 8 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அது பொருளாகவோ, நேரமாகவோ, நிம்மதியாகவோ கூட இருக்கலாம். வேட்பாளராக இருக்கும் நீங்கள் கட்சி தொண்டர்களின் பிம்பமாக இருக்கிறீர்கள் கட்சியின் ஆன்மா ஆன்மாவின் பிம்பமாக இருக்கிறீர்கள். தமிழகத்தில் ஒரு போலியான அரசியலை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா புதுவிதமான அரசியலை கையில் எடுத்துள்ளது. அதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. எட்டு மாதத்தில் தி.மு.க சம்பாதித்த கெட்ட பெயர் 80 ஆண்டுகளுக்கு எந்த அரசியல் கட்சியும் சம்பாதிக்கவில்லை. மக்கள் நமக்கு ஓட்டுப் போட தயாராக இருக்கிறார்கள். தமிழகத்தில் மிகப் பெரிய மாற்று சக்தி நாம்தான். முழுமையாக அர்ப்பணிப்புடன் பதினொரு நாட்கள் உழைக்க வேண்டும், என்றார்.
newstm.in