அடுத்தவர் மனைவியுடன் படுக்கையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ- நேரில் பார்த்த கணவர் மீது தாக்குதல் !!
அடுத்தவர் மனைவியுடன் படுக்கையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ- நேரில் பார்த்த கணவர் மீது தாக்குதல் !!
வீட்டின் பெண்ணுடன் தனியாக இருந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ தன்னை தாக்கியதாக அப்பெண்ணின் கணவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு திருமணமாகி விஜயஸ்ரீ என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். காலையில் பணிக்கு செல்லும் குமார் இரவில் வீட்டுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி இரவு வேலையை முடித்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் முன்பு கார் ஒன்று நிற்பதை கண்டு பதற்றமடைந்த அவர், வீட்டின் கதவும் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தார். எனினும் சந்தேகமடைந்து அவர் வீட்டில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு, முன்னாள் அதிமுக எம்எல்ஏ-வான நாஞ்சில் முருகேசனுடன் அவரது மனைவி விஜயஸ்ரீ தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ந்துப்போனார். ஜன்னல் உடைக்கும் சத்தம் கேட்டு வெளியேவந்த நாஞ்சில் முருகேசன், குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.
இதில் காயமடைந்த குமார் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது வீட்டில் மனைவுடன் தனிமையில் இருந்துவிட்டு, தட்டிக்கேட்ட தன்னையும் தாக்கியதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்தார்.
அந்தப்புகாரில், போலீசார் நடத்திய விசாரணையில் நாஞ்சில் முருகேசன் என்பவருக்கும் அப்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளாக தவறான உறவு இருந்து வந்ததாகவும், தான் வேலைக்கு நாகர்கோவில் சென்று விடும் நிலையில் எனது வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் சம்பவத்தன்று நான் அவர்கள் தனிமையில் இருப்பதை நேரில் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது கார் டிரைவர் மகேஷ் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவான நாஞ்சில் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
நாஞ்சில் முருகேசன் ஏற்கனவே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று பிணையில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக தனது மகளை களமிறக்கி நாஞ்சில் முருகேசன் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in