தமிழ்நாட்டில் அடுத்தது பாஜக ஆட்சி தான்..!!

தமிழ்நாட்டில் அடுத்தது பாஜக ஆட்சி தான்..!!

Update: 2022-05-19 04:30 GMT

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ‘திராவிட மாயை’ என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். 

அதன்பின் பேசிய அவர், திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் தான். கடந்த 2 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து பார்த்து வருகிறேன். இந்த திராவிட ஆட்சி ஒரு கூடாராம் போல் செயல்பட்டு வருகிறது.

திமுகவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை. திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று. அதனை உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது. திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். தொடக்க காலத்தில் திராவிட தலைவர்கள் சித்தாந்தத்தை உருவாக்கியதை போல தற்போது அக்கட்சி செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் 90 சதவீத அமைச்சர்களுக்கு டெல்லிக்கு சென்றால் ஆங்கிலத்தில் பேசக்கூட முடியாதவர்கள். விமானம் மூலம் ஏற்றி விட்டால் கூட தனியாக டெல்லி சென்று ஆங்கிலம் தெரியாததால் தமிழ்நாட்டிற்கான ஒரு பைசா நிதியை கூட அவர்களால் வெற்றிபெற முடியாது.

2024-ம் ஆண்டு ஒரு மைல் கல்லாக இருக்கப்போகிறது. அந்த ஆண்டு பாஜகவை நோக்கி மக்கள் வெள்ளம்போல் வரவுள்ளனர். 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் கண்டிப்பாக பாஜக ஆட்சியமைக்கும். அதை யாரும் தடுக்க முடியாது என்றார்.

Similar News