கொரோனாவின் அடுத்த உருமாற்றம்.. திணறும் மருத்துவ நிபுணர்கள் !

கொரோனாவின் அடுத்த உருமாற்றம்.. திணறும் மருத்துவ நிபுணர்கள் !

Update: 2022-03-19 16:36 GMT

கொரோனா எனும் உயிர்கொள்ளி தொற்று உலகம் முழுவதும் விவரிக்க முடியாத அழிவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டது. காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று இதுவரை பல்வேறு வடிவங்களுக்கு கொரோனா வைரஸ் மாறிவிட்டது. இதில் டெல்டா பிளஸ் வகை கொரோனா உலகம் முழுவதும் மாபெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி அதிரவைத்தது.

தற்போது ஓரளவுக்கு மக்கள் நிம்மதியடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். இதற்கு கொரோனா தடுப்பூசி முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் ஆப்ரிக்க நாடுகள் மூலம் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வடிவத்திற்கு வந்தது. மின்னல் வேகத்திலும் பரவினாலும் பெரியளவில் உயிர் சேதம் ஏற்படுத்தாதது ஆறுதல் அளித்தது. அதனையும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கட்டுக்குள் கொண்டுவந்தன.

இதற்கிடையே கொரோனா 4ஆவது அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் 4ஆவது அலை வர வாய்ப்பு இல்லை என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தென்கொரியா, சீனா, ஹாங்காங் உள்பட சில நாடுகளில் ஒமைக்ரான் வைரசின் புதிய வடிவம் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஒமைக்ரான் பி.ஏ-2 வகை வடிவம் பரவுவதால் இந்த நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக மற்ற நாடுகளிலும் ஒமைக்ரான் பி.ஏ-2 பரவி அடுத்த அலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் அடுத்தடுத்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஒமைக்ரான் புதிய வடிவம் காரணமாக அடுத்த அலை வரலாம். அல்லது வராமலும் போகலாம் என்று தெரியவந்துள்ளது. ஆனால் புதிய அலை எழுந்தால் அது எப்போது வரும் என்பதை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. 

இதனால் கொரோனாவின் அடுத்த நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் உள்ளனர். இது மருத்துவ வல்லுநர்களுக்கு சவாலாக உள்ளது.

 

newstm.in

 

Similar News