கடைமுன் சிறுநீர் கழித்தவரை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக் கொலை!!

கடைமுன் சிறுநீர் கழித்தவரை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக் கொலை!!

Update: 2022-07-11 08:02 GMT

ராஜஸ்தானில் தனது கடை முன்பு சிறுநீர் கழித்த இளைஞர்களை தட்டிக்கேட்ட முதியவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குல்தீப் என்ற இளைஞர் முதியவரின் கடைக்கு முன் சிறுநீர் கழிக்க முயன்றபோது, முதியவர் அவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குல்தீப், இரும்பு கம்பியை கொண்டு முதியவரின் தலையில் பலமுறை அடித்துள்ளார். அவரது நண்பர்கள் இரண்டு பேர் குல்தீபுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, குல்தீப் மீனா (19), ராகுல் மீனா என்ற சிந்து (18) மற்றும் பிரதீப் மீனா (19) என்ற மூன்று குற்றவாளிகளை கைது செய்தனர். சிசிடிவி காட்சிகள் தெளிவாக இல்லை என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது.

ஆனாலும் தொழில்நுட்ப விசாரணையின் அடிப்படையில் சிறப்புக் குழு, மூன்று குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த நபரைக் கண்டுபிடித்து இறுதியில் மூவரையும் கைது செய்தது.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News