சுடு தண்ணியை தொட்டுப்பார்த்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி!!

சுடு தண்ணியை தொட்டுப்பார்த்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி!!

Update: 2022-02-25 06:30 GMT

மின்சாரத்தை துண்டிக்காமல் வாட்டர் ஹீட்டர் போடப்பட்டிருந்த சுடு தண்ணீரை தொட்டு பார்த்த மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சென்னை குரோம்பேட்டையை அடுத்த நாகல்கேணி திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்த மூதாட்டி ஜெயலட்சுமி (65), கணவர் இறந்த நிலையில், தனது மகள் சந்திராவுடன் வசித்து வந்தார்.

அவர் வழக்கம்போல் வாட்டர் ஹீட்டர் மூலமாக சில்வர் பாத்திரத்தில் சுடு தண்ணீர் போட்டுவிட்டு, சிறிது நேரம் கழித்து தண்ணீர் சூடாகிவிட்டதா என்று மின்சாரத்தை துண்டிக்காமல் தொட்டுப் பார்த்தபோது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டவர் மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்ட அவரது மகள் சந்திரா உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலட்சுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போலீஸார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Similar News