பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சொந்த காரை உடைத்த உரிமையாளர்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சொந்த காரை உடைத்த உரிமையாளர்!!

Update: 2022-06-13 06:30 GMT

சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஒருவர் தனது காரை தானே உடைக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் சின்னத்திரை நடிகரான காமராஜ் என்கின்ற கருத்து காமராஜ் பல்வேறு நாடகங்களிலும் நடித்து வருகிறார். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் இவர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதனால் ஆத்திரத்தில் தனக்கு சொந்தமான காரை தானே கல்லால் அடித்து உடைத்து அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளத்தில் காமராஜ் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளத்தில் ரொம்ப கோவக்கார இருப்பாரோ என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தனது சொந்தக் காரை தானே கற்களால் தாக்கி உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News