8ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த நோயாளி!!
8ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த நோயாளி!!
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள நியூரோ சயின்ஸ் மருத்துவமனையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுதிர் அதிகாரி என்ற நோயாளி அந்த மருத்துவமனையில் எட்டாவது மாடியின் ஜன்னல் வழியாக வெளியேறி இருக்கிறார்.
விஷயம் அறிந்த சுதிரின் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். அவர்கள் மூலம் போலீசுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸும், தீயணைப்புத்துறையினரும் சுதிர் அதிகாரியை கீழே குதிக்க விடாமல் மீட்க பல்வேறு வழிகளில் முயன்றனர். அவரை நோக்கி ஏணியை கொண்டு சென்றபோது, அவர் கீழே குதிக்க தயாரானார்.
அதனால் கீழே மெத்தையும், வலைகளும் விரிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், மீட்புக்குழுவினரின் முயற்சியை மீறி சுதிர் கீழே குதித்திருக்கிறார். இதனால் அவரது விலா, தலை மற்றும் இடது கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து கீழே விழுந்த சுதிருக்கு அதே மருத்துவமனையிலேயே தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தின் பிரதான நுழைவுவாயில் மூடப்பட்டது.
Kolkata, West Bengal | A patient has climbed out of a ward to sit on a highrise edge of the Institute of NeuroScience Hospital and is showing unwillingness to get down. Hydraulic ladder is reportedly being brought to bring him down pic.twitter.com/QWRhyhbhxq
— ANI (@ANI) June 25, 2022
newstm.in