கொடூரத்தின் உச்சம்..!! லஞ்சம் தராததால் பெண்ணுக்கு எய்ட்ஸ் என எழுதிய ஆஸ்பத்திரி ஊழியர்கள்..!!

கொடூரத்தின் உச்சம்..!! லஞ்சம் தராததால் பெண்ணுக்கு எய்ட்ஸ் என எழுதிய ஆஸ்பத்திரி ஊழியர்கள்..!!

Update: 2022-03-02 14:44 GMT

ஆந்திரா கடப்பா மாவட்டம் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.

கர்ப்பிணியான இளம்பெண் கடந்த ஞாயிறன்று நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அன்றைய இரவே அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆகியுள்ளது.

அப்போது, மருத்துவமனை ஊழியர் ஒருவர் 2000 ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். அதனை அப்பெண் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனை ஊழியர் பெண்ணுக்கும், பிறந்த சிசுவுக்கும் எய்ட்ஸ் நோய்த்தொற்று இருப்பதாக பொய்க் கூறி பீதியை கிளப்பியிருக்கிறார்.

இதனையறிந்த பெண்ணின் உறவினர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பின்னர் எச்.ஐ.விக்கான பரிசோதனை முடிவுகளை கேட்டபோது அந்த ஊழியர் முன்னுக்குப்பின் முரணாக பேசியிருக்கிறாராம். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார்கள்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லஞ்சம் தராத காரணத்தால் எய்ட்ஸ் இருப்பதாக பொய்க் கூறியதாக மருத்துவமனை ஊழியர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News